திராவிட படையெடுப்பு உண்மையா? திராவிடர்கள் வந்தேறிகளா?
- ஆரிய படையெடுப்பை உண்மை என்று ஏற்றுக் கொண்டவர்கள் திராவிட படையெடுப்பும் உண்மை என்று ஏற்றுக் கொள்வார்கள். ஆரிய படையெடுப்பு பொய் என்றால் திராவிட படையேடுப்பும் பொய்தான்.
- திராவிட படையெடுப்பு நடந்தது உண்மையா? எப்பொழுது? என்ற வினா எல்லோரிடமும் எழலாம்.ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று யார் முதலில் சொன்னாரோ அவரே திராவிட படையெடுப்பும் நடந்ததாக எழுதியுள்ளார். ஆம் அதே கிறித்துவ ஆங்கிலேயன் கால்டுவெல் தான், அவரது ஆராய்ச்சியின் படி திராவிடர்களும் வடமேற்கு திசை வழியாக பாரதத்தில் நுழைந்தவர்கள். அதன் பிறகுதான் ஆரியர்கள் வந்தார்கள் என்பது ஆகும்.
- திராவிடர்கள் வெளியிலிருந்து நுழைந்தவர்கள் என்றால் அவர்கள் வருவதற்கு முன்பு இங்கு வாழ்ந்து வந்தவர்கள் யார்? என்ற வினா எழலாம்.அடுத்த ஒரு கிறித்துவ ஆங்கிலேயன் டாக்டர் கேய்னே கூறுவது என்னவென்றால், “ஆரிய மொழி பேசும் ஹிந்துக்கள் இங்கு நுழைவதற்கு முன்பே திராவிடர்கள் ஊடுருவல் செய்துள்ளனர். ஆகமொத்தம் இந்த ஆரியர்கள், திராவிடர்கள் இருவருமே பூர்வ குடியினர் அல்ல. இங்கு நீக்ரோ இனம் சார்ந்த கூட்டம் வாழ்ந்துள்ளது. காலப்போக்கில் அந்த இனம் அழிந்து விட்டது.”
- இதில் எது உண்மை? ஆரியருக்கும் முன்பே திராவிடர்கள் இந்த நாட்டின் வந்தேறிகள் என்பது இந்த ஆங்லேய கிறித்துவர்களின் கூற்று.அப்படி என்றால் இந்த பாரத தேசத்தில் முதலில் வந்தேறிகள் திராவிடர்களே, பின்னர் ஆரியர்கள், அதன் பின்னர் அன்னியர்கள்.
- இந்த கூற்றின் படி ஆரியனே, வெளியேறு, வந்தேறி, என்றும் கூறும் அந்நியர்களும், திராவிடர்களும் வந்தேறிகள் தான்.
- இன்றைய சூழலில் ஆரியர்களை வந்தேறி என்று கூறும் மடையர்கள், திராவிடர்கள் தான் முதலில் வந்தேறிகள் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். யார் முதலில் வந்தார்களோ அவர்கள் முதலில் (First in First) வெளியேறலாம், அல்லது யார் இறுதியில் (Last in First ) வந்தார்களோ அந்த அந்நியர்கள். வெளியேறலாம். இடையில் வந்த ஆரியன் முதலில் வெளியேறுவது அவசியம் இல்லை. இதுதான் அறிவாளிகளின் நியதி.
- ஆரிய, திராவிட இனவாதம் ஒரு கட்டுக்கதை என்பதையும் ஆரிய திராவிட வருகை போய் என்பதையும் ஞானிகள், தெய்வீகமானவர்கள், தேசபக்தர்கள் அறிவார்கள்.
- எழுத்து : நந்தி ஹனுமன்