Wednesday, April 21, 2010

தமிழ் நாட்டில் சங்க சிக்ஷா வர்க்கக்கள் துவங்கின






நாட்டிற்காக சர்வசங்க பரிதியாகம் செய்யும் பண்பினை ஒவ்வொரு குடிமகனிடமும் உருவாக்குவதே ஆர் எஸ் எஸ் பயிற்சியின் நோக்கம் - சேதுமாதவன்ஜி

ஏப்ரல் 19, 2010, தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆர் எஸ் எஸ் ஸின் தக்ஷிண் தமிழ் நாட்டின் முதலாம் ஆண்டு மற்றும் சம்யுக்த தமிழ் நாட்டின் இரண்டாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்க்கக்கள் துவங்கி உள்ளன. தூத்துக்குடி காமராஜர் மழலையர் பள்ளியில் வைத்து நடைபெறும் இந்த வர்க்கக்களின் துவக்க விழா ஏப்ரல் 19 அன்று காலையில் நடந்தது. பண்பு பயிற்சி முகாமின் வரவேற்பு குழுவின் தலைவர் திரு வி.வி.தி ரவீந்திரன் அவர்கள் முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தக்ஷிண் தமிழ்நாட்டின் பிராந்த கார்யவாஹ் ஸ்ரீ எஸ் ராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். க்ஷேத்ர பிரசாரக் ஸ்ரீ சேதுமாதவன்ஜி தனது துவக்க உரையில் கூறியதாவது:

நாடு முழுவதும் தற்போது சங்க சிக்ஷா வர்க்கக்கள் நடந்து கொண்டிருக்கின்ற்ன. இந்த முகாம்கள் வெறும் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் கேம்புகள் அல்ல. திறமைகளை வளர்த்து அத்திறமைகளை எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் நல்லவர்களை உருவாக்கும் ஷாகாக்களை நடத்த பயிற்சி கொடுப்பதே இந்த முகாம்களின் நோக்கம்.

நம் நாட்டில் பேச்சாளர்கள் அதிகம். சுயநலமின்றி உழைப்பவர்கள் குறைவு. சுயநலம், சமுதாய சண்டை, சமுதாய வேறுபாடு உருவாக்கப் படுகிறது. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இவ்விதம் செய்கின்றனர்.

டாக்டர் ஹெட்கேவார் எண்ணம் : “ஒரு நாட்டை உருவாக்குபவர்கள் படைத்தளபதிகளோ. புத்திசாலிகளோ விஞ்ஞானிகளோ அல்ல. சாதாரண மனிதர்களில் எத்தனை பேர் நாட்டிற்காக சர்வ சங்க பரித்தியாகம் செய்கிறார்களோ அதைப் பொறுத்தே ஒரு நாட்டின் உயர்வு அமைகிறது. இந்த மனிதனை உருவாக்கும் வேலை நடக்க வேண்டும். இதுவே நாட் டிற்கு முக்கியமான வேலை. இந்த நோக்கத்துக்காகத்தான் சங்கத்தினைத் துவக்கினார்.

விஞ்ஞானிகள், பேச்சாளர்கர் எழுத்தாளர்கள் என்று இருந்தால் மட்டும் போதாது. சமுதாயத்திற்காக அந்த திறமைகளை அவர்கள் அர்பணிக்க தயாரானால்தான் வலிமையான சமுதாயம் உருவாகும். ரஜ்ஜுபையா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தபோது, சி வி ராமன் A future great scientist is come up (ஒரு வருங்கால மாபெரும் விஞ்ஞானி மேலே வநதுகொண்டிருக்கிறார்) என்று குறிப்பிட்டார். ரஜ்ஜுபையா சங்க பிரச்சாரக் ஆனார். We lost very great scientist (நாம் ஒரு மாபெரும் விஞ்ஞானியை இழந்து விட்டோம்) என்று பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் கூறினார்.

நாட்டுக்காக அந்த அளவு தியாகம் செய்யும் திறமையுள்ள கார்யகர்தாக்களை தயாரிப்பிதற்கு இப்பயிற்சி முகாம்.

இந்த கோடை காலத்தில் கோடைவாசஸ்தலங்களை மக்கள் விரும்புவார்கள் ஆனால் சர்சங்கசாலக் முதல் அனைத்து அதிகாரிகளும் இந்த சங்க சிக்ஷா வர்க நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார்கள். சிக்ஷார்த்திகள் எல்லோரும் சீருடை போக்குவரத்து கட்டணம் முகாம் கட்டணம் போன்ற அனைத்து செலவுகளையும் தாங்களே செய்து இங்கு வந்திருக்கின்றனர். இது போதாது என்பதற்காக முகாம் செலவுகளை ஈடு கட்டுவதற்காக வரவேற்பு குழு வேலை செய்து வருகிறது.

இங்கு சுகபோக வசதிகள் இல்லை. காலை நாலரை மணி முதல் இரவு பத்தரை மணி வரை தொடர்ந்து பணி இருக்கும். சிலர் வீட்டில் நல்ல வசதிகள் உண்டு. அவர்கள் சாப்பிட்ட தட்டைக் கூட கழுவ மாட்டார்கள். இங்கு இல்லை. நம் உடைகளை நாமே துவைத்து மடித்து எடுத்து வைக்க வேண்டும். இங்கு உள்ள பயிற்சிகள் எல்லாம் அடுத்தவருக்கே நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவை. இது நம் சமுதாய பண்பாடு.

ஆர். எஸ். எஸ். காம்ப் முஸ்லிம்களுக்கு எதிராகத்தான்; மசூதி இடிப்பதற்கு என்று முஸ்லீம் பிரச்சாரம் ஒரு ஊரில் நடந்தது. எனவே அங்கு கேம்ப்புக்கு முன் போலீஸ் குவிக்கப் பட்டது. சங்கத்தின் சீரான கட்டுப்பாடான பயிற்சிகளைப் பார்த்து வியந்த, ஐ ஜி What is the inspiration behind this (இதன் பின்னால் உள்ள தூண்டுதல் என்ன? ) என்று கேட்டார். We want to create patriotism in the people's mind to do any sacrifice for our mother land (நாட்டிற்காக எதனையும் தியாகம் செய்யும் தேசபக்தியினை மக்களின் மனங்களில் ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம்) என்று நாம் பதில் அளித்தோம். Don't get excited (கிளர்ச்சி அடைந்து விடாதீர்கள்) என்று அவர் புன்னகையுடன் பதில் அளித்தார்.

சங்க முகாமில் கபடிப் போட்டி, தேசப்பற்று போட்டி போன்று பல போட்டிகள் உண்டு. அனைத்திலும் வெற்றி சங்கத்திற்கே. இதன் மூலம் தனி நபருக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். நல்ல திறமை வளரும். அதன் மூலம் நல்ல ஷாகா உருவாகும். இப்படிப் பட்ட ஷாகாக்களை நன்கு நடத்த நாம் பயிற்சி கொடுக்கிறோம்.

இதன் விளைவாகத்தான் சமீபத்தில் கேரளத்தில் 92000 முழு கணவேஷ் அணிந்த ஸ்வயம்சேவகர்கள் சர்சங்கசாலக்கிற்கு வரவேற்பு அளித்த மாபெரும் நிகழ்ச்சி நடந்தது. பத்து பதிரெண்டு லட்சம் தாய்மார்கள் கலந்து கொண்டனர். நாலாயிரம் பஸ்கள் பயன்படுத்தப் பட்டன. ஒரு போக்குவரத்து நெரிசல் கிடையாது. ஒரு பிளாஸ்டிக் குப்பை கிடையாது. இது ஒரே நாளில் வரமுடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்காக பணி செய்யும் பயிற்சி இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட நிலையை உருவாக்க முடியும். இதன் மூலம் மட்டுமே நாட்டுக்கு நன்மையும், உலக நாடுகளுக்கு இடையே கௌரவமும் கிடைக்கும். இந்த நோக்கத்திற்காகவே நாடு முழுவதும் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன.

எனவே இதை நன்கு புரிந்துக் கொண்டு, தெளிவாக உணர்ந்து, நன்கு பயிற்சி பெற்று, நன்கு நாட்டிற்காக தொண்டு செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

------------------------------------------------------------------------------------------------------------------------

சங்கியா

பிரதம வர்ஷா – 322

த்வதீய வர்ஷா – 79

ஆக மொத்தம் – 401 ஸ்வயம்சேவகர்கள் முகாமில் பயிற்சி பெருகின்றனர்.

பிரதம வர்ஷா வர்காதிகாரி திரு பூ மு ராமகிருஷ்ணன் சஹ பிராந்த வ்யவஸ்தா பிரமுக் தக்ஷிண் தமிழ்நாடு. வர்க காரியவாஹ் திரு வே ராமகிருஷ்ணன் விபாக் சேவா பிரமுக் திருச்சிராப்பள்ளி விபாக். வர்க பாலக் அதிகாரி திரு வைகுண்டம் பிராந்த வ்யவஸ்தா பிரமுக் தக்ஷிண் தமிழ்நாடு.

த்விதீய வர்ஷா வர்காதிகாரி திரு ஹரிஹரகோபாலன் சஹ பிராந்த

சம்பர்க் பிரமுக் உத்தர தமிழ்நாடு. வர்க காரியவாஹ் திரு ஆ. ஆடலரசன் விபாக் கார்யவாக் ராமேஸ்வரம் விபாக் வர்க பாலக் அதிகாரி திரு பத்மகுமார் க்ஷேத்ர சேவை பிரமுக் தக்ஷிண் க்ஷேத்ரம்.

திரு எஸ் ராஜேந்திரன் பிராந்த கார்யவாஹ் தக்ஷிண் தமிழ்நாடு திரு கேசவ விநாயகன் பிராந்த பிரசாரக் தக்ஷிண் தமிழ்நாடு, திரு செந்தில் சஹ பிராந்த பிரசாரக் தக்ஷிண் தமிழ்நாடு இம்மூவரும் தூத்துக்குடி சங்க சிக்ஷா வர்க – க்கள் வெற்றிகரமாக நடைபெற வர்கவிலேயே தங்கி இருந்து வழிநடத்தி வருகின்றனர்.

சர்கார்யவாஹ் மானனீய திரு சுரேஷ் ஜோஷி அகில பாரத சேவா பிரமுக் மானனீய திரு சீதாராம் கெதிலாயா ஆகியோர் இந்த வர்க்களில் வழிகாட்ட உள்ளனர்.

Monday, April 5, 2010

நக்ஸல்வாதமே நாட்டின் முதல் எதிரி - சிதம்பரம்


சென்னை ஏப்ரல் 5

அடுத்த் இரண்டு நக்ஸல் மூன்று ஆண்டுகளில் நக்ஸல் பிரச்சினை முழுவதுமாக தீர்க்கப்பட்டு விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நேற்று இரவு ( 4 April) சென்னை அருகே ஆவடியில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும்,

நக்ஸல் வாதம்தான் நாட்டின் முதல் எதிரி

என்றும் தெரிவித்தார்