Tuesday, January 28, 2020

திராவிட படையெடுப்பு உண்மையா? திராவிடர்கள் வந்தேறிகளா?

திராவிட படையெடுப்பு உண்மையாதிராவிடர்கள் வந்தேறிகளா?

  • ஆரிய படையெடுப்பை உண்மை என்று ஏற்றுக் கொண்டவர்கள் திராவிட படையெடுப்பும் உண்மை என்று ஏற்றுக் கொள்வார்கள். ஆரிய படையெடுப்பு பொய் என்றால் திராவிட படையேடுப்பும் பொய்தான்.
  • திராவிட படையெடுப்பு நடந்தது உண்மையா? எப்பொழுது? என்ற வினா எல்லோரிடமும் எழலாம்.ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று யார் முதலில் சொன்னாரோ அவரே திராவிட படையெடுப்பும் நடந்ததாக எழுதியுள்ளார். ஆம் அதே கிறித்துவ ஆங்கிலேயன் கால்டுவெல் தான், அவரது ஆராய்ச்சியின் படி திராவிடர்களும் வடமேற்கு திசை வழியாக பாரதத்தில் நுழைந்தவர்கள். அதன் பிறகுதான் ஆரியர்கள் வந்தார்கள் என்பது ஆகும்.
  • திராவிடர்கள் வெளியிலிருந்து நுழைந்தவர்கள் என்றால் அவர்கள் வருவதற்கு முன்பு இங்கு வாழ்ந்து வந்தவர்கள் யார்? என்ற வினா எழலாம்.அடுத்த ஒரு கிறித்துவ ஆங்கிலேயன் டாக்டர் கேய்னே கூறுவது என்னவென்றால், “ஆரிய மொழி பேசும் ஹிந்துக்கள் இங்கு நுழைவதற்கு முன்பே திராவிடர்கள் ஊடுருவல் செய்துள்ளனர். ஆகமொத்தம் இந்த ஆரியர்கள், திராவிடர்கள் இருவருமே பூர்வ குடியினர் அல்ல. இங்கு நீக்ரோ இனம் சார்ந்த கூட்டம் வாழ்ந்துள்ளது. காலப்போக்கில் அந்த இனம் அழிந்து விட்டது.”
  • இதில் எது உண்மை? ஆரியருக்கும் முன்பே திராவிடர்கள் இந்த நாட்டின் வந்தேறிகள் என்பது இந்த ஆங்லேய கிறித்துவர்களின் கூற்று.அப்படி என்றால் இந்த பாரத தேசத்தில் முதலில் வந்தேறிகள் திராவிடர்களே, பின்னர் ஆரியர்கள், அதன் பின்னர் அன்னியர்கள்.
  • இந்த கூற்றின் படி ஆரியனே, வெளியேறு, வந்தேறி, என்றும் கூறும் அந்நியர்களும், திராவிடர்களும் வந்தேறிகள் தான்.
  • இன்றைய சூழலில் ஆரியர்களை வந்தேறி என்று கூறும் மடையர்கள், திராவிடர்கள் தான் முதலில் வந்தேறிகள் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். யார் முதலில் வந்தார்களோ அவர்கள் முதலில் (First in First) வெளியேறலாம், அல்லது யார் இறுதியில் (Last in First ) வந்தார்களோ அந்த அந்நியர்கள். வெளியேறலாம். இடையில் வந்த ஆரியன் முதலில் வெளியேறுவது அவசியம் இல்லை. இதுதான் அறிவாளிகளின் நியதி.
  • ஆரிய, திராவிட இனவாதம் ஒரு கட்டுக்கதை என்பதையும் ஆரிய திராவிட வருகை போய் என்பதையும் ஞானிகள், தெய்வீகமானவர்கள், தேசபக்தர்கள் அறிவார்கள்.
  • எழுத்து : நந்தி ஹனுமன்

Sunday, December 12, 2010

ஹனுமான் வேள்வி

தக்கலையில் ஹனுமன் சக்தி ஜெபவேள்வி, ஹனுமன் சக்தி ஜாகரண் சமிதி சார்பில் 12.12.2010 ஞாயிறு அன்று நடைபெற்றது. கன்யாகுமரி மாவட்டம், தக்கலை கண்டவின் சார்பில் நடைபெற்ற இந்த வேள்விக்கு ஹனுமன் சக்தி ஜாகரண் சமிதியின் மாவட்டப் பொறுப்பாளர் திரு.தெய்வப்ரகாஷ் தலைமை தாங்கினார். மாநிலப் பொறுப்பாளர் க்ருஷ்ண முத்துசாமி சிறப்புரை ஆற்றினார்.

திரு.தெய்வப்ரகாஷ் தனது தலைமையுரையில் ஹிந்துத்வம் குறித்தும், ஹனுமனைக் குறித்தும் விளக்கினார்.

சிறப்புரை ஆற்றிய திரு.க்ருஷ்ண முத்துசாமி தனது உரையில்

ஹனுமான் சக்தி மிக்கவர். நாம் அனுமனை வழிபடவேண்டும். ராமருடைய ஆலயம் அமைத்திட ஹனுமனின் அருளை வேண்டி நாடு முழுவதும் ஜெபவேள்வி நடந்து வருகிறது.

அயோத்திப் பிரச்சனை வெறும் இந்து – முஸ்லீம் பிரச்சனையோ, கோவில் – மசூதி பிரச்சனையோ அல்ல. மாறாக இது நமது பாரத நாட்டின் தன்மானப் பிரச்சனை.

சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் சோமநாதர் ஆலயத்தினை ஜெய் சோமநாத் என்ற முழக்கமிட்டு மீட்டார் நமது முதல் உள்துறை அமைச்சரும், துணைப்பிரதமரும் ஆன வல்லபபாய் பட்டேல்.

அயோத்தி கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதனை இடித்த பாபர் ஒரு நெறியாளரோ, மத்த்தலைவரோ அல்ல. மாறாக இந்த நாட்டினை ஆக்கிரமிக்க வந்த ஆக்கிரமிப்பாளன். அவரது படைத்தலைவரான மீர்பாகியினால் உடைக்கப்பட்ட இந்த ஆலயத்தினை மீட்க இதுவரை 76 முறைகள் போர்கள் நடந்துள்ளன. அதில் மூன்றரை லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

அயோத்திப் பிரச்சனையில் – அதே இடத்தில் இருந்த்து ராமர் ஆலயம்தான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. மற்ற மத்த்தினர் உடனடியாக இந்த தீர்ப்பினை ஏற்று, கோவில் கட்ட அந்த இடத்தினை விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். மாறாக இந்துக்களுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்துக்களுக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸின் வஸந்த் ஸாத்தே போன்றோர் ஓரங்கட்டப் பட்டனர்.

இந்துக்கள் ஒருங்கிணைந்தால் இந்த ஆலயம் கட்ட அனைத்து அரசியல்வாதிகளும் போட்டிபோட்டு கொண்டு முன்னால் வருவர். ஆயிரம் வருட கண்ணகி சிலையினை மீட்க போராடிய அதே உணர்வுதான், ராமர் ஆலய போராட்டத்திலும் இருக்கிறது.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் ராமர் கோயில் பிரச்சனைப் தேவைதானா என்று இந்துக்களிடம் கேட்பவர்கள், இதே கேள்வியினை முஸ்லீம்களிடம் கேட்பதில்லை.

கம்யூனிஸ்டு கட்சிக்காரர் ஒருவர் என்னிடம் “அதே இடத்தில்தான் கோவில் கட்ட வேண்டுமா? சிறிது தள்ளி கட்டக்கூடாதா?என்று கேட்டார். நான், “உங்களது கொடிக்கம்பத்தில் எங்களது கொடியினை ஏற்றுகிறேன். நீங்கள் பக்கத்தில் ஒரு கொடிக்கம்பம் நட்டு அதில் உங்களது கொடியினை ஏற்றிக் கொள்ளுங்கள். தேவையெனில் அந்த கொடிக்கம்பம் செய்யும் செலவினையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.“ என்றதற்கு அவர் வெகுண்டார். சாதாரண கொடிக்கம்பத்திற்கே இப்படி என்றால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்லாயிரக்கணக்காக வழிபட்டு வரும் ராமர்ஆலயத்தினை மீட்பது எத்துனை முக்கியம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

ராமர் ஆலயப் பிரச்சனையில் தாய்மார்களின் பங்கு முக்கியமானர். மகிஷாசுரனை அழித்த பராசக்தி போன்று பெண்கள் இந்த போராட்ட்த்தில் வெகுண்டெழ வேண்டும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் தனது புத்தகத்தில் – போலந்தில் கம்யூனிஸ்டு ஆட்சியினை அகற்றி விட்டோம். போப்- அமெரிக்க கூட்டணி ரஷ்ய நாட்டினை சிதறடித்து விட்டது. பாரத நாட்டினையும் சிதறடிக்க முயன்றோம். ஆனால் ராமர் ஆலய போராட்டம் மக்களை ஒருங்கிணைத்து எங்களது எண்ணத்தினை ஈடேற விடாமல் செய்துவிட்டது. – என்று எழுதி இருக்கிறார்.

ஆகவே இந்த ராமர் ஆலயப் போராட்டம் தேசத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொண்டு, மீண்டும் அதே இடத்தில் பெரிய ராமர் ஆலயம் அமைந்திட பாடுபடுவோம்.

நிறைவில் அஜய்குமார் நன்றியுரை வழங்கினார்.

ஹனுமன் சாலிஸா பாடப்பட்டது. அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் வேள்வியில் அர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீப ஆராதனையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 100 ஆண்களும், 90 பெண்களும் கலந்து கொண்டனர்.


Saturday, May 29, 2010

ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நிறைவு விழா










ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நிறைவு விழா

தூத்துக்குடியில் கடந்த 10 ஆண்டுகளாக ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பாக கோடைகாலத்தில் இது பல மையங்களில் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 81 மையங்களில் 2000 மாணவ மாணவியர் இதில் பயன் பெற்றனர்.

பத்தாவது ஆண்டின் நிறைவு விழா 29.05.2010 சனிக்கிழமையன்று தூத்துக்குடி அருள்மிகு சங்கர்ராமேஸ்வரர் திருக்கோவிலில் வைத்து நடைபெற்றது.

விழாவின் துவக்கமாக பண்பாட்டு வகுப்பு குழந்தைகளின் ஊர்வலம் சிவன் கோவிலில் துவங்கியது. ஊர்வலத்தினை திரு. C.K. கனி அவர்கள் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிவன்கோவிலை வலம்வந்த்து. சிறு குழந்தைகள் தேசபக்தர்களின் வேடம் புனைந்து வந்திருந்த்து கண்ணைக் கவர்ந்த்து.

நிறைவுவிழா பொதுக்கூட்டத்திற்கு சி.எம்.பள்ளியின் தாளாளர் திரு.திருச்சிற்றம்பலம் தலைமை தாங்கினார். ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் தலைவர் திரு.S.K.S.C.நடராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பா.விநாயக மூர்த்தி (அன்னை ஜூவல்லர்ஸ்), சங்கர்ராமேஸ்வர்ர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத்தலைவர் திரு.கோட்டுராஜா இருவரும் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் துணைப்பொது மேலாளர் ஆசீர்வாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தலைமையுரை ஆற்றிய சி.எம் பள்ளியின் தாளாளர் திருச்சிற்றம்பலம், அனைவரும் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மாறவேண்டும். குழந்தைகளை பெற்றோர் நல்ல முறையில் வளர்க்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

சிறப்புரை ஆற்றிய சுப்பிரமணியன், “நமக்கு இறைபக்தி கற்றுத்தரப்பட்டிருக்கிறது. இறைவனின் நாமத்தினால் திருநாவுக்கரசர் அனைத்து இடர்களையும் வென்றார். நாமும் அதேபோன்று இடர்களை வென்று ஹிந்துக்களாக இருப்போம். ராமனைப் போல அனைவரையும் சகோதர்ர்களாக அரவணைத்துச் செல்வோம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்ற பாரதியின் வாக்கினை மனதில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு, நமக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம்“ என்றார்.

பரிசுகளை திரு.பி.எஸ்.கே மாரியப்பன், வழக்கறிஞரும் நகர சங்கசாலகருமான மான்னீய ச.த.சந்தோஷம், கீழசண்முகபுரம் பத்ரகாளியம்மன் கோவில் செயலாளர் திருசங்குராஜன், மாநகராட்சி உறுப்பினர்க்ள் கே.கந்தசாமி, வி.எஸ்.ஆர்.பிரபு, ஸ்டூடன்ஸ் தனிப்பயிற்சி கல்லூரியின் தாளாளர் திரு.ஏ.நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

பண்பாட்டு வகுப்புகளின் செயலாளர் திரு.பாலசுப்பிரமணிய குருக்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

Saturday, May 8, 2010

சங்க சிக்ஷ வர்க - பொதுவிழா - தூத்துக்குடி










ஆர். எஸ். எஸ் பண்புப்பயிற்சி முகாம் நிறைவுவிழா

தூத்துக்குடி, 08.05.2010 ஞாயிறு

தூத்துக்குடியில் 08.05.2010 ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் தென்தமிழ்நாட்டின் முதலாமாண்டு பயிற்சியை முடித்த 322 சிக்ஷார்திகளும், தமிழ்நாட்டின் இரண்டாமாண்டு பயிற்சியை முடித்த 79 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டு அவர்கள் இருபது நாட்களில் பெற்ற ஷாரீரிக் பயிற்சிகளைச் செய்து காட்டினர்.

மாலை 4.55 மணிக்கு காமராஜர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் துவங்கியது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தினை காமராஜர் கல்லூரியின் செயலாளர் திரு.C.S.ராஜேந்திரன் காவிக்கொடிக்கு மலர்தூவித் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளான சண்முகபுரம், தெற்குசம்பந்த மூர்த்தி தெரு, கீழரதவீதி, இரண்டாம் கேட், ஆண்டாள் தெரு வழியாக அணிவகுப்பு ஊர்வலம் புதிய பேரூந்து நிலையத்தின் அருகிலுள்ள மைதானத்தினை சென்றடைந்த்து. கோஷ் வாத்திய இசையுடன் கட்டுப்பாட்டுடன் அணிவகுத்து வந்த ஸ்வயம்சேவகர்களின் இந்த அணிவகுப்பு ஊர்வலத்தினை வழிநெடுகிலும் இருமருங்கிலும் நின்று திரளான மக்கள் கண்டு களித்தனர்.

மைதானத்தில் மீனவர் காலனி ஊர்தலைவர் திரு.E.அண்ணாத்துரை அவர்கள் கொடிஏற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார். ஆடலரசன் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு திரு.V.V.D.ரவீந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். குதிரைமொழி ஊராட்சித் தலைவர் V.கன்னிமுத்து அவர்கள் முன்னிலை வகித்தார்.

கன்யாகுமரி மாவட்டம் வெள்ளிமலை, விவேகானந்தா ஆசிரமத்தின் சுவாமி பூஜனீய சைதன்யானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் முதல்வரும், தக்ஷிண க்ஷேத்ர சங்கசாலக்குமான மா. இரா.வன்னியராஜன் சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி ஜில்லா கார்யவாஹ் திரு. சி.லிங்கபாண்டி மகிழ்ச்சியுரை நிகழ்த்தினார்.

ஆசியுரை

மக்களுக்குச் சங்கப்பயிற்சி அளித்திட ஏற்பாடு செய்ய வேண்டியது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு. –

சுவாமி சைதன்யானந்த மகராஜ்

இன்று வெள்ளிமலையில் இருக்கின்ற ஆசிரமத்தை வழிநடத்திட எனக்கு வித்திட்டது ஆர்.எஸ்.எஸ். எட்டாவது வயது முதல் நான் ஷாகா சென்றதால் எனக்குக் கிடைத்த தியாக உணர்வு நான் துறவியாகிட வழிவகுத்தது. நாட்டிற்காக, நமது கலாச்சாரத்திற்காக நாம் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக வேண்டும் என்ற உணர்வைத்தான் ஷாகா மூலமாக ஆர்.எஸ்.எஸ் கொடுக்கிறது. தண்ட கொண்டுவரக்கூடாது என்றெல்லாம் சொல்லி, ஏதோ பயங்கரவாத பயிற்சி கொடுப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த சங்கத்தின் பயிற்சியை பெற்றிருந்தார்கள் என்றால் மும்பைத் தாக்குதலின்போது மக்கள் திறமையாக பயங்கரவாதிகளை எதிர்கொண்டிருப்பார்கள், உயிர் சேதமும் தவிர்க்கப் பட்டிருக்கும். சங்கப்பயிற்சியை மக்களுக்கு அளிக்க ஏற்பர்டு செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. ஆனால் அறியாமை காரணமாக இதைச் செய்வதில்லை. தேசப்பற்றுள்ளவர்களாக ஆக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸினுடைய வேலை. ஆனால் அதை பயந்த கண்ணோடு, அச்சத்தோடு பார்க்கும் வண்ணம் சித்தரித்து உள்ளனர். இது அநியாயம். தங்களுக்கு தேசபக்தி இல்லை என்பதை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். தேசபக்தியுள்ளவர்கள் உருவானால் நாம் ஆட்சிக் கட்டிலில் உட்கார முடியாது. எனவே ஆர்.எஸ்.எஸ் எங்கு சென்றாலும் தடைசெய்ய வேண்டும். சங்கப்பயிற்சி பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். தன்னம்பிக்கையுடன் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். நாட்டில் திறமை உள்ளவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் பண்புள்ளவர்கள்தான் இப்போது தேவை. அத்தகைய பண்பினைக் கற்றுக்கொடுப்பது ஆர்.எஸ்எஸ். இந்தப் பயிற்சியைக் கொடுப்பதற்காக தியாக மனப்பான்மையுள்ள ஏராளமானோர் வேண்டும். தியாகம் செய்தால்தான் எதையும் அடையமுடியும் என்று வேதம் சொல்கிறது. – தனது நோயுற்ற கணவனின் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் சத்ரபதி சிவாஜியைக் காட்டிக்கொடுக்காமல், காப்பாற்றிய 18 வயது இளம்பெண்ணின் தியாக உணர்வினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது வாழ்க்கையின் லட்சியம் இறைவனை அடைவதுதான். நமது தர்மம் திருமணம் பண்ணுவதைத் தடை செய்யவில்லை. திருமணம் பண்ணுவதுதான் வாழ்க்கை என்று எண்ணிடக்கூடாது. நாற்பது வயதில் ஒருவன் டாக்டர் ஆகவில்லையா, கலெக்டர் ஆகவில்லையா என்று எவரும் கேட்பதில்லை. ஆனால் திருமணம் ஆகவில்லையா என்று எல்லோரும் கேட்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் திருமணம் செய்து கொள்வது பாவம் என்று ஒரு சுதந்திரப் போராட்ட வீர்ர் கூறினார். நாடு சுதந்திரம் கிடைத்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். ஆனால்

ஹிந்துக்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை

ஹிந்துக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. என்று ராமர் கோயில் எழும்புமோ அப்போதுதான் உண்மையில் சுதந்திரம் கிடைத்த்தாக பொருள். ஹிந்துக்களின் இந்த சுதந்திரப் போராட்டத்தில் நாம் அனைவரும் பிரசாரகர்களாக மாறுவோம். நாட்டுப்பற்று, இந்த நாடு பெரிய நிலையில் அமர்ந்து இருப்பதை நமது கண்ணால் காண்போம். நாமெல்லாம் இந்த சுதந்திரப்போராட்டத்தில் குதித்து ஆகுதி ஆவோம். பிரசாரகர்களாக ஆவோம். பாரத அன்னை உலகின் குருவாக வீற்றிருப்பதை நமது கண்ணால் காண்போம். அதற்கு இறைவன் அருள் புரியட்டும்.

விழாத்தலைவர் திரு.V.V.D.ரவீந்திரன் அவர்கள் தனது தலைமையுரையில், ஆர்.எஸ்.எஸ் தேசபக்தி, ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கிறது. நேருஜீ பாராட்டிய இயக்கம் இது. தீண்டாமையை அறவே அகற்றிய அமைப்பு இது. காந்தியடிகள், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள் ஆர்எஸ்எஸ்ஸில் தீண்டாமை சிறிதும் அற்ற இந்த நிலை கண்டு பாராட்டி இருக்கின்றனர்.

இந்த நூற்றாண்டு, ஹிந்து நூற்றாண்டு -

மா.இரா.வன்னியராஜன்


மா.இரா.வன்னியராஜன் அவர்கள் தனது சிறப்புரையில்,

நம்முடைய பகுதி இன்று ஒரு ஆனந்தமான நாள். நம்முடைய தமிழகம் தேசிய தமிழகம், நம்முடைய தமிழகம் ஆன்மீகத் தமிழகம். நாயன்மார்களும், ஆழ்வார்களும் தவழ்ந்த பூமி. நம்முடைய சுதந்திரப் போராட்ட காலத்தில் 1920க்கு முன்னர் மும்மூர்த்திகள் நம்முடைய சுதந்திரப் போராட்டத்தினை வழிநடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் லால்-பால்-பால் என்பர். பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய், மத்திய பாரத்த்தில் பாலகங்காதர திலகர், வங்காளத்தில் விபின் சந்திரபால் – இந்த மும்மூர்த்திகள் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தினை விரைவு படுத்திக் கொண்டிருந்தனர். தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் தலைமையில் தெற்குப்பகுதியில் மும்மூர்த்திகள் இருந்தனர். அவர்களது தவத்தினால் மிளிர்ந்திருக்கிறது இந்த முத்து நகரம். இது தவபூமி, அந்த வீர்ர்களின் பணிக்களம் இது. இரண்டு ஆயுள்தண்டனை பெற்றவர்கள் இரண்டு பேர். வெள்ளையனுக்கு அடுத்த பிறவி மீது நம்பிக்க்கைக் கிடையாது. ஆனால் நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்தினை வேகப்படுத்திய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. ஒருவர் விநாயக தாமோதர சாவர்க்கர். அவர் அனுபவித்த்து போன்று சித்ரவதைகள் இந்த நாட்டில் வேறு எவரும் அனுபவிக்க வில்லை. அவரை மறந்த்து போன்று இந்த நாடு வேறு எவரையும் மறக்கவில்லை.

இரண்டாமவர் நம்முடைய வ.உ.சிதம்பரனார். வஉசியுடன் இன்னமும் இரண்டு பேர் இருந்தனர். ஒருத்தர் சுப்பிரமணிய சிவா. வெள்ளையன் சிறைச்சாலையில் அவருக்குச் சீதனமாக்க் கொடுத்த்து தொழுநோய். அந்த்த் தொழுநோயுடன் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் தன்னைச் சுதந்திரப் போராட்ட களத்தில் இணைத்துக் கொண்டார். மூன்றாமவர் சுப்பிரமணிய பாரதியார். பாரத நாடு பழம்பெரும் நாடு, பாரத நாடு பார்க்கெலாம் திலகம் நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்று முழங்கினார் பாரதி. இந்த மூவரின் பணிக்களம் இந்த தூத்துக்குடி மாவட்டம். தூத்துக்குடியினை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் சுற்றி வந்தனர் இந்த மூவரும். ஒரு புனிதமான பூமி இது. தேசத்திற்காக தன்னுடைய வாழ்க்கையினை சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் 401 இளைஞர்கள் இங்கு பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

சுவாமிஜியின் ஆசியுரை, ஆத்மார்த்தமான – பேச்சு குறைவாகவும், செயல் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்கின்றார். பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள். மற்றவர்கள் நடைபிணம் என்கிறார் அவர். மனிதனை மனிதனாகவும், மனிதனை தெய்வமாகவும் ஆக்குவதுதான் எனக்குப் பிடித்தமான பணி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இந்தப்பணியைத்தான் ஆர் எஸ் எஸ் செய்து வருகின்றது. சங்கத்தினைத் துவக்கிய டாக்டர்ஜி பிறவி தேசபக்தர். ஏதோ ஒரு திருப்புமுனை காரணமாக திடீரென தேசபக்தி பூண்டவரல்ல அவர். தனது வாழ்க்கையில் தனக்கென வாழாது பிறருக்காகவே வாழ்ந்த மகான் அவர். 1934 இல் வார்தா முகாமினைப் பார்வையிட்டார் காந்தியடிகள். ஏன் காங்கிரஸிலேயே நீங்கள் இந்த அமைப்பினை உருவாக்கிடக் கூடாது என்று டாக்டர்ஜீயிடம் கேட்டார். நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? உங்கள் குடும்பத்திற்கு என்ன செய்கிறீர்கள்? என்று டாக்டர்ஜீயிடம் கேட்டார் காந்திஜீ – நான் எந்த தொழிலும் செய்யவில்லை. நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்றவுடன் சங்கத்தின் வளர்ச்சிக்கான காரணத்தினை புரிந்து கொண்டார் மகாத்மாகாந்தி. இந்த விஷயத்தினை தில்லியில் 1947 இல் ஆர்.எஸ்எஸ் சாங்கிக்கில் நினைவுபடுத்திய காந்திஜி.

இந்த நாட்டிற்காக ஆத்மார்த்தமாக பணிபுரியும் அத்தனைபேரையும் இணைத்துக்கொள்ளும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். சுவாமி விவேகானந்தர் பொருளாதார உதவிகள் கேட்டு நாட்டின் பசி பட்டினியைப் போக்கிட வெளிநாடு சென்றார். அங்கு மூன்றரை ஆண்டுகாலம் கடந்து நாடு திரும்புகையில் லண்டனில் ஓர் இளைஞர் சுவாமிஜீயிடம் சுவாமிஜீ இப்போது தாங்கள் உங்கள் நாட்டினைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று வினவினார். நான் புறப்படும்போது எனது நாட்டினை நேசித்தேன். இப்போது என் நாட்டின் அணுஅணுவும் புனிதமானது என்றார். உங்களது பூமி போகபூமி. எங்களுடைய பூமியோ, ஒவ்வோர் அணுவும் இறைவனை அடையவேண்டும் என்று துடிக்க்க்கூடிய பூமி. ஒவ்வொருவரும் இறுதிப் பிறவி எடுக்க வேண்டிய நாடு. சுவாமிஜி வெறும் வார்த்தைகளில் சொன்னது அல்ல இது. சுவாமிஜி நமது நாட்டில் ராமநாதபுரம் கடற்கரையில் குந்துகால் என்ற இடத்தில் வந்து இறங்கும்போது, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா தனது தலையில் கால்வைத்து இறங்குமாறு வேண்டி நிற்கிறார். சுவாமிஜியின் கால்கள் தரையில் படக்கூடாது என்பதற்காக கடற்கரையில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்த்து. ஆனால் சுவாமிஜீயோ தரையில் விழுந்து வணங்கி, கடற்கரை மணலை எடுத்து மேனியெங்கும் பூசிக் கொண்டார்.

அமெரிக்காவில் சுவாமிஜீயைக் கவர்ந்த அமைப்பு. இணைந்து வேலை செய்யும் தன்மை. இத்தகைய அமைப்பினை சங்கம் உருவாக்கி உள்ளது. இதனை சென்னையில் நடந்த சங்க நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டிப் பேசிய ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவர், சங்கத்தின் ஒருமணி நேர ஷாகா வரையில் இருக்கும் நிர்வாக்க் கொள்கைகள் என்று சேர்ந்து சிந்திப்பது, இணைந்து வேலைசெய்தல், சேர்ந்து வெற்றி பெறுதல். நான்கு – ஐந்து பேர்கள் இணைந்து வேலைசெய்யும் தன்மை நம் நாட்டிற்குத் தேவை. அது சங்கத்தில் இருக்கிறது. என்றார்.

ஹிந்து கடலாக இருந்தாலும், சாதிக்க முடியவில்லையே என்று வருந்திய டாக்டர்ஜி. ஹிந்துதான் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறான். கடவுள் இல்லை என்றாலும் அவரும் ரிஷி – கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று முஸ்லீம் நாட்டில் சொல்ல முடியாது. சொன்னால் இருக்க முடியாது. நம் நாட்டில் அவ்விதம் சொன்னவர் - அவரும் நம்நாட்டில் பெரியார்.

மேற்கு திசைக்கு மலாய் மொழியில் பெயர் பாரதம். பிற திசைகளுக்கு தக்ஷிணம் (தெற்கு), உத்தர் (வடக்கு) போன்று பெயர் சொல்கிறார்கள். அவ்வாறு கலாச்சார செல்வாக்கு உலகம் முழுவதும் பரவி இருந்த்து நாம் இணைந்திருந்தபோது. சமுதாயம் பிளவுபட்டபோது, நாம் ஓராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டோம். பிற நாடுகள் சில தாக்குதல்களில் அழிந்து விட்டன. கிரேக்கம், எகிப்து போன்ற நாடுகள் இருக்கின்றன. ஆனால் அவர்களின் பண்பாடு அவர்களிடம் இல்லை. நம் நாட்டில் ஆதியும் அந்தமும் இல்லாத ஹிந்து தர்ம்ம். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், அலெக்ஸாண்டர் பெயர் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் கிரேக்க நாட்டில் இல்லை. நமது மொகமது ஹாலி இஸ்லாமிய சரித்திர அறிஞர் கூறுகிறார், உலகம் முழுவதும் பறைசாற்றி வந்த இஸ்லாமிய கப்பல் பாரத்த்தின் கங்கையில் முழுகி விட்டது. இருநூறு ஆண்டுகள் கிறிஸ்துவகர்கள் ஆட்சி செய்தாலும் இந்த நாட்டினை மதமாற்றிட முடியவில்லை. இந்த பகுதியில் பிற மத்த்தினர் இருப்பது உண்மைதான் . இன்று ம்தமாற்றம் இருக்கின்றது. அது ஆக்கிரமிப்பு. அது வெறும் வழிபாட்டு முறை மாற்றம் மட்டுமல்ல. அது வெறும் மதமாற்றமாக இருந்து விட்டால் கவலை இல்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர் – இறைவன் ஒருவரே அவரை பலரும் பல பெயரிட்டு அழைக்கின்றனர் என்றார். இதைச் சொல்பவர் ஹிந்து. இந்த சிந்தனை இன்று உலகம் முழுவதும் வேண்டும். சகிப்புத்தன்மை அறவே இல்லாத ஒரு நிலையை உருவாக்கி இருப்பவர்கள் – ஒரே கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் – இன்று அவர்கள் பயங்கரவாத்த்தினை உருவாக்கி உள்ளனர். இவை அனைத்தையும் ஆராய்ச்சி செய்த அர்னால்டு டாயன்பீ – எழுதி ஹிஸ்டரி ஆப் சிவிலைசேஷன் – உலக நாகரீகஙகளின் வரலாறு – இந்தநூற்றாண்டின் துவக்கம் மேற்கத்திய நாடுகளின் தாக்கம். இந்த நூற்றாண்டின் நிறைவு இந்துக்கள்தான். உலகின் இஸங்கள் அனைத்தும் தோற்றுவிட்டன. உலகில் இந்துக்களின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

சுவாமி விவேகானந்தர் இந்த நாடு மகோன்னத நிலையில் இருப்பதைக் கண்டார். அதனை நாம் இந்தக் கண்ணால் காண முடியும். ஆனால் அதற்கான விலையினை நாம் கொடுத்தே ஆகவேண்டும். அதற்காக சுவாமி விவேகானந்தரின் கனவினை நனவாக்கும் பணியினை ஆர் எஸ் எஸ் செய்க்கிறது. வரும் ஐம்பது ஆண்டுகளுக்கு பாரத மாதாவையே தெய்வமாக்க் கொள்ள வேண்டும் என்று சங்கம் கூறுகிறது.

ஜீவ சேவையே சிவசேவை – நரசேவையே நாராயண சேவை – ஜன சேவையே ஜனார்த்தனசேவை என்பது சுவாமி விவேகானந்த்ரின் உபநிஷதம். மக்களுக்குத் தொண்டு செய்வதே உண்மையில் தெய்வப்பணி . நாம் வாழ்நாள் முழுவதும் இந்தப் பணியினைச் செய்ய வேண்டும். காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை நாம் அனைவரும் நம் குடும்பம் என்ற எண்ணத்துடன் வேலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோளுடன் நிறைவு செய்கிறேன்.

Wednesday, April 21, 2010

தமிழ் நாட்டில் சங்க சிக்ஷா வர்க்கக்கள் துவங்கின






நாட்டிற்காக சர்வசங்க பரிதியாகம் செய்யும் பண்பினை ஒவ்வொரு குடிமகனிடமும் உருவாக்குவதே ஆர் எஸ் எஸ் பயிற்சியின் நோக்கம் - சேதுமாதவன்ஜி

ஏப்ரல் 19, 2010, தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆர் எஸ் எஸ் ஸின் தக்ஷிண் தமிழ் நாட்டின் முதலாம் ஆண்டு மற்றும் சம்யுக்த தமிழ் நாட்டின் இரண்டாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்க்கக்கள் துவங்கி உள்ளன. தூத்துக்குடி காமராஜர் மழலையர் பள்ளியில் வைத்து நடைபெறும் இந்த வர்க்கக்களின் துவக்க விழா ஏப்ரல் 19 அன்று காலையில் நடந்தது. பண்பு பயிற்சி முகாமின் வரவேற்பு குழுவின் தலைவர் திரு வி.வி.தி ரவீந்திரன் அவர்கள் முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தக்ஷிண் தமிழ்நாட்டின் பிராந்த கார்யவாஹ் ஸ்ரீ எஸ் ராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். க்ஷேத்ர பிரசாரக் ஸ்ரீ சேதுமாதவன்ஜி தனது துவக்க உரையில் கூறியதாவது:

நாடு முழுவதும் தற்போது சங்க சிக்ஷா வர்க்கக்கள் நடந்து கொண்டிருக்கின்ற்ன. இந்த முகாம்கள் வெறும் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் கேம்புகள் அல்ல. திறமைகளை வளர்த்து அத்திறமைகளை எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் நல்லவர்களை உருவாக்கும் ஷாகாக்களை நடத்த பயிற்சி கொடுப்பதே இந்த முகாம்களின் நோக்கம்.

நம் நாட்டில் பேச்சாளர்கள் அதிகம். சுயநலமின்றி உழைப்பவர்கள் குறைவு. சுயநலம், சமுதாய சண்டை, சமுதாய வேறுபாடு உருவாக்கப் படுகிறது. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இவ்விதம் செய்கின்றனர்.

டாக்டர் ஹெட்கேவார் எண்ணம் : “ஒரு நாட்டை உருவாக்குபவர்கள் படைத்தளபதிகளோ. புத்திசாலிகளோ விஞ்ஞானிகளோ அல்ல. சாதாரண மனிதர்களில் எத்தனை பேர் நாட்டிற்காக சர்வ சங்க பரித்தியாகம் செய்கிறார்களோ அதைப் பொறுத்தே ஒரு நாட்டின் உயர்வு அமைகிறது. இந்த மனிதனை உருவாக்கும் வேலை நடக்க வேண்டும். இதுவே நாட் டிற்கு முக்கியமான வேலை. இந்த நோக்கத்துக்காகத்தான் சங்கத்தினைத் துவக்கினார்.

விஞ்ஞானிகள், பேச்சாளர்கர் எழுத்தாளர்கள் என்று இருந்தால் மட்டும் போதாது. சமுதாயத்திற்காக அந்த திறமைகளை அவர்கள் அர்பணிக்க தயாரானால்தான் வலிமையான சமுதாயம் உருவாகும். ரஜ்ஜுபையா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தபோது, சி வி ராமன் A future great scientist is come up (ஒரு வருங்கால மாபெரும் விஞ்ஞானி மேலே வநதுகொண்டிருக்கிறார்) என்று குறிப்பிட்டார். ரஜ்ஜுபையா சங்க பிரச்சாரக் ஆனார். We lost very great scientist (நாம் ஒரு மாபெரும் விஞ்ஞானியை இழந்து விட்டோம்) என்று பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் கூறினார்.

நாட்டுக்காக அந்த அளவு தியாகம் செய்யும் திறமையுள்ள கார்யகர்தாக்களை தயாரிப்பிதற்கு இப்பயிற்சி முகாம்.

இந்த கோடை காலத்தில் கோடைவாசஸ்தலங்களை மக்கள் விரும்புவார்கள் ஆனால் சர்சங்கசாலக் முதல் அனைத்து அதிகாரிகளும் இந்த சங்க சிக்ஷா வர்க நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார்கள். சிக்ஷார்த்திகள் எல்லோரும் சீருடை போக்குவரத்து கட்டணம் முகாம் கட்டணம் போன்ற அனைத்து செலவுகளையும் தாங்களே செய்து இங்கு வந்திருக்கின்றனர். இது போதாது என்பதற்காக முகாம் செலவுகளை ஈடு கட்டுவதற்காக வரவேற்பு குழு வேலை செய்து வருகிறது.

இங்கு சுகபோக வசதிகள் இல்லை. காலை நாலரை மணி முதல் இரவு பத்தரை மணி வரை தொடர்ந்து பணி இருக்கும். சிலர் வீட்டில் நல்ல வசதிகள் உண்டு. அவர்கள் சாப்பிட்ட தட்டைக் கூட கழுவ மாட்டார்கள். இங்கு இல்லை. நம் உடைகளை நாமே துவைத்து மடித்து எடுத்து வைக்க வேண்டும். இங்கு உள்ள பயிற்சிகள் எல்லாம் அடுத்தவருக்கே நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவை. இது நம் சமுதாய பண்பாடு.

ஆர். எஸ். எஸ். காம்ப் முஸ்லிம்களுக்கு எதிராகத்தான்; மசூதி இடிப்பதற்கு என்று முஸ்லீம் பிரச்சாரம் ஒரு ஊரில் நடந்தது. எனவே அங்கு கேம்ப்புக்கு முன் போலீஸ் குவிக்கப் பட்டது. சங்கத்தின் சீரான கட்டுப்பாடான பயிற்சிகளைப் பார்த்து வியந்த, ஐ ஜி What is the inspiration behind this (இதன் பின்னால் உள்ள தூண்டுதல் என்ன? ) என்று கேட்டார். We want to create patriotism in the people's mind to do any sacrifice for our mother land (நாட்டிற்காக எதனையும் தியாகம் செய்யும் தேசபக்தியினை மக்களின் மனங்களில் ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம்) என்று நாம் பதில் அளித்தோம். Don't get excited (கிளர்ச்சி அடைந்து விடாதீர்கள்) என்று அவர் புன்னகையுடன் பதில் அளித்தார்.

சங்க முகாமில் கபடிப் போட்டி, தேசப்பற்று போட்டி போன்று பல போட்டிகள் உண்டு. அனைத்திலும் வெற்றி சங்கத்திற்கே. இதன் மூலம் தனி நபருக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். நல்ல திறமை வளரும். அதன் மூலம் நல்ல ஷாகா உருவாகும். இப்படிப் பட்ட ஷாகாக்களை நன்கு நடத்த நாம் பயிற்சி கொடுக்கிறோம்.

இதன் விளைவாகத்தான் சமீபத்தில் கேரளத்தில் 92000 முழு கணவேஷ் அணிந்த ஸ்வயம்சேவகர்கள் சர்சங்கசாலக்கிற்கு வரவேற்பு அளித்த மாபெரும் நிகழ்ச்சி நடந்தது. பத்து பதிரெண்டு லட்சம் தாய்மார்கள் கலந்து கொண்டனர். நாலாயிரம் பஸ்கள் பயன்படுத்தப் பட்டன. ஒரு போக்குவரத்து நெரிசல் கிடையாது. ஒரு பிளாஸ்டிக் குப்பை கிடையாது. இது ஒரே நாளில் வரமுடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்காக பணி செய்யும் பயிற்சி இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட நிலையை உருவாக்க முடியும். இதன் மூலம் மட்டுமே நாட்டுக்கு நன்மையும், உலக நாடுகளுக்கு இடையே கௌரவமும் கிடைக்கும். இந்த நோக்கத்திற்காகவே நாடு முழுவதும் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன.

எனவே இதை நன்கு புரிந்துக் கொண்டு, தெளிவாக உணர்ந்து, நன்கு பயிற்சி பெற்று, நன்கு நாட்டிற்காக தொண்டு செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

------------------------------------------------------------------------------------------------------------------------

சங்கியா

பிரதம வர்ஷா – 322

த்வதீய வர்ஷா – 79

ஆக மொத்தம் – 401 ஸ்வயம்சேவகர்கள் முகாமில் பயிற்சி பெருகின்றனர்.

பிரதம வர்ஷா வர்காதிகாரி திரு பூ மு ராமகிருஷ்ணன் சஹ பிராந்த வ்யவஸ்தா பிரமுக் தக்ஷிண் தமிழ்நாடு. வர்க காரியவாஹ் திரு வே ராமகிருஷ்ணன் விபாக் சேவா பிரமுக் திருச்சிராப்பள்ளி விபாக். வர்க பாலக் அதிகாரி திரு வைகுண்டம் பிராந்த வ்யவஸ்தா பிரமுக் தக்ஷிண் தமிழ்நாடு.

த்விதீய வர்ஷா வர்காதிகாரி திரு ஹரிஹரகோபாலன் சஹ பிராந்த

சம்பர்க் பிரமுக் உத்தர தமிழ்நாடு. வர்க காரியவாஹ் திரு ஆ. ஆடலரசன் விபாக் கார்யவாக் ராமேஸ்வரம் விபாக் வர்க பாலக் அதிகாரி திரு பத்மகுமார் க்ஷேத்ர சேவை பிரமுக் தக்ஷிண் க்ஷேத்ரம்.

திரு எஸ் ராஜேந்திரன் பிராந்த கார்யவாஹ் தக்ஷிண் தமிழ்நாடு திரு கேசவ விநாயகன் பிராந்த பிரசாரக் தக்ஷிண் தமிழ்நாடு, திரு செந்தில் சஹ பிராந்த பிரசாரக் தக்ஷிண் தமிழ்நாடு இம்மூவரும் தூத்துக்குடி சங்க சிக்ஷா வர்க – க்கள் வெற்றிகரமாக நடைபெற வர்கவிலேயே தங்கி இருந்து வழிநடத்தி வருகின்றனர்.

சர்கார்யவாஹ் மானனீய திரு சுரேஷ் ஜோஷி அகில பாரத சேவா பிரமுக் மானனீய திரு சீதாராம் கெதிலாயா ஆகியோர் இந்த வர்க்களில் வழிகாட்ட உள்ளனர்.