


ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நிறைவு விழா
தூத்துக்குடியில் கடந்த 10 ஆண்டுகளாக ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பாக கோடைகாலத்தில் இது பல மையங்களில் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 81 மையங்களில் 2000 மாணவ மாணவியர் இதில் பயன் பெற்றனர்.
பத்தாவது ஆண்டின் நிறைவு விழா 29.05.2010 சனிக்கிழமையன்று தூத்துக்குடி அருள்மிகு சங்கர்ராமேஸ்வரர் திருக்கோவிலில் வைத்து நடைபெற்றது.
விழாவின் துவக்கமாக பண்பாட்டு வகுப்பு குழந்தைகளின் ஊர்வலம் சிவன் கோவிலில் துவங்கியது. ஊர்வலத்தினை திரு. C.K. கனி அவர்கள் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிவன்கோவிலை வலம்வந்த்து. சிறு குழந்தைகள் தேசபக்தர்களின் வேடம் புனைந்து வந்திருந்த்து கண்ணைக் கவர்ந்த்து.
நிறைவுவிழா பொதுக்கூட்டத்திற்கு சி.எம்.பள்ளியின் தாளாளர் திரு.திருச்சிற்றம்பலம் தலைமை தாங்கினார். ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் தலைவர் திரு.S.K.S.C.நடராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பா.விநாயக மூர்த்தி (அன்னை ஜூவல்லர்ஸ்), சங்கர்ராமேஸ்வர்ர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத்தலைவர் திரு.கோட்டுராஜா இருவரும் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் துணைப்பொது மேலாளர் ஆசீர்வாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தலைமையுரை ஆற்றிய சி.எம் பள்ளியின் தாளாளர் திருச்சிற்றம்பலம், அனைவரும் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மாறவேண்டும். குழந்தைகளை பெற்றோர் நல்ல முறையில் வளர்க்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
சிறப்புரை ஆற்றிய சுப்பிரமணியன், “நமக்கு இறைபக்தி கற்றுத்தரப்பட்டிருக்கிறது. இறைவனின் நாமத்தினால் திருநாவுக்கரசர் அனைத்து இடர்களையும் வென்றார். நாமும் அதேபோன்று இடர்களை வென்று ஹிந்துக்களாக இருப்போம். ராமனைப் போல அனைவரையும் சகோதர்ர்களாக அரவணைத்துச் செல்வோம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்ற பாரதியின் வாக்கினை மனதில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு, நமக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம்“ என்றார்.
பரிசுகளை திரு.பி.எஸ்.கே மாரியப்பன், வழக்கறிஞரும் நகர சங்கசாலகருமான மான்னீய ச.த.சந்தோஷம், கீழசண்முகபுரம் பத்ரகாளியம்மன் கோவில் செயலாளர் திருசங்குராஜன், மாநகராட்சி உறுப்பினர்க்ள் கே.கந்தசாமி, வி.எஸ்.ஆர்.பிரபு, ஸ்டூடன்ஸ் தனிப்பயிற்சி கல்லூரியின் தாளாளர் திரு.ஏ.நடராஜன் ஆகியோர் வழங்கினர்.
பண்பாட்டு வகுப்புகளின் செயலாளர் திரு.பாலசுப்பிரமணிய குருக்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment